Header Ads Widget

<

அரசு ஊழியர்களின் அகவிலை படி உயர்வு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படுமா ?

அரசு ஊழியர்களின்  அகவிலை படி உயர்வு  செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படுமா ?





தமிழக அரசு ஊழியர்களின் அகவிலை படி வருகிற செப்டம்பர் மாதம் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் கொரோன  பரவல் காரணமாக நாடுமுழுவதும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டதால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் சில சலுகைகள் பறிக்கப்பட்டன. தற்போது கொரோன தொற்றிலிருந்து படி படியாக இயல்பு நிலை திருப்பி உள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மற்ற மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி 11 சதவீதம்  உயர்த்தி  .அறிவித்தன. ஆனால் தமிழக அரசு அறிவிக்கவில்லை இதனால் தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதை மறு பரிசீலினை செய்து வருகிற செப்டம்பர் மாதம் இதற்கான அறிவிப்பை  வெளியிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.