சென்னை : தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்விகள் பல்வேறு தரப்பிலிருந்து கேட்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 21 தேதி 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி செப்டம்பர் 21ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழக அரசு அதைப்பற்றி முடிவு இன்னும் வெளியிடவில்லை. இதற்க்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பேட்டியில் மாணவர்களின் பெற்றோர்களின் மனநிலை என்ன என்பது பொறுத்து தான் முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
அக்டோபர் 5 தேதி
அதே நேரத்தில் தமிழகத்தில் அக்டோபர் ௫ தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் வழிகாட்டுதலின் உள்ள நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்படுகிறது என்று சில தகவல்கள் வெளியாகின. இதனால் தமிழக அரசு பள்ளிகளின் தேதி அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு பற்றி அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அக்டோபர் ௫ தேதி பள்ளிகள் திறப்பு பற்றி கேள்வி கேட்டபோது அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அக்டோபர் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் அரசு தரப்பில் அரசு தரப்பில் எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடவில்லை. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்தவுடன் நான் மக்களிடம் தெரிவிக்கிறேன் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.