தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைக்க மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் பல்வேறு தரப்புகளிடமிருந்து பள்ளிகள் திறப்பு தேதி என்ன என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது.
செப்டம்பர் இருபத்தி ஒன்றாம் (21) தேதி முதல் பள்ளிகளில் திறக்க அனுமதிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதில் மாணவர்களை பகுதி நேரமாக பள்ளிகளுக்கு வர அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் அடுத்த மாதம் அக்டோபர் 5ம் தேதி முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பகுதிநேர முக்கிய வகுப்புகளும், ஆய்வக வகுப்புகளும் நடத்தலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி திறப்பு பற்றி சுகாதார துறையினரிடம் அவர்களிடம் வழிகாட்டு நெறிமுறைகளை முடிவு செய்துள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் அனுமதி பெற்ற பின்பு முதலமைச்சரிடம் எடுத்துரைத்து அவரிடம் அனுமதி பெற்று பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு விரைவில் தியாகம் எனத் தெரிகிறது.
பள்ளிப் பாடத் திட்டங்கள் குறைப்பு
1. பள்ளிகள் மூடப் பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கான படங்களை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
2. ஊரடங்கு உத்தரவினால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பள்ளிப் பாடங்கள் தேங்கிக் கிடக்கின்றன ஆனால் இனிமேல் தேங்கி உள்ள படங்களை ஆசிரியர்கள் நடத்துவது பெரிதும் சவாலான காரியம். இதனால் பல மாநிலங்கள் பள்ளிப் பாடங்களை குறைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
3. தமிழக பள்ளிகளில் 10 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைமுறையில் இருக்கின்றன. இதனால் இந்த மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதால் 10 11 12 ஆகிய மாணவர்களை மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவழைத்து பாடங்கள் எடுக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
4. அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளில் அனுமதிப்பது குறித்த விவரங்கள் ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
5. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நடப்பு கல்வியாண்டில் மேல்நிலை பள்ளி வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றபடி மற்ற வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு (Revision Exam) மட்டும் நடத்தி எந்தக் கல்வி ஆண்டை நிறைவு செய்யலாம் என திட்டமிடபடுவதாக கூறப்படுகிறது.