Header Ads Widget

<

நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு - TAMILNADU SCHOOL OPEN DATE





நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
  தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்கள் எதிர்பார்ப்பு 

ந்தியா முழுவதும் கொரோனா தொற்றினால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் தொழிற்சாலைகள், கேளிக்கை அரங்குகள், சுற்றுலாத்தலங்கள், போக்குவரத்து கழகம், கல்வி நிறுவனங்கள் போன்றவைகள் எல்லாம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந் நிலையில் மத்திய அரசு தற்போது படிப்படியாக தளர்வுகளை  அறிவித்து வருகிறது. இதனால் மக்களின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் வரலாம் என்றும், ஆசிரியர்களின் மாணவர்களுக்கு ஆலோசனை கொடுக்கலாம் என்று அறிவித்தது இருந்தது.


இன்று முதல் நாடுகளில் பல மாநிலங்களில் இலைகள் திறக்கப்பட்டன. மாணவர்களிடையே முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டன.


எந்தெந்த மாநிலங்களில் பட்டன என்று இங்கு பார்ப்போம்

நாடு முழுவதும் சுமார் ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அசாம், ஆந்திரா, மிசோரம், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, பஞ்சாப், மேகலாயா, இமாச்சலப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பள்ளிகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கர்நாடகாவில் பொருத்தவரையில் பள்ளிகளில் வகுப்புகள் நடக்காது என்றும் அதே நேரத்தில் மாணவர்கள் சந்தேகத்தை போக்குவதற்காக ஆசிரியர்கள் இருப்பார்கள் அதற்காக பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் தமிழகத்தைப் பொருத்தவரை பள்ளிகள் திறப்பு பற்றி அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பள்ளிகள் திறந்த பின் சுழற்சிமுறை வகுப்புகள் இருக்காது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலை அறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் மாணவர்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.