ரேஷன் கடைகளில் அக்டோபர் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு நடைமுறைக்கு வருகிறது
இந்தியா முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதாவது இதற்கு முன்னால் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் மட்டும்தான் பொருட்களை வாங்க முடியும். ஆனால் இந்த நடைமுறை வந்தால் அனைத்து மக்களும் எந்த ஊரிலும், எந்த மாநிலங்களும் சென்று குடும்ப அட்டையை கொடுத்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறுவார்கள். வெளியூர்களுக்கு சென்றால்கூட அங்குள்ள ரேசன் கடைகளில் இந்த குடும்ப அட்டையை காண்பித்து பொருட்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் புலம்பெயரும் தொழிலாளர்கள் மிகவும் பயனடைவார்கள்.
இந்த நடைமுறை தமிழகத்தின் அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன் முன்னோட்டமாக கடந்த ஜூலை மாதமே தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றது. இதனால் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான கருவியை பொருத்தும் பணியை தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது. இந்தப் பணியை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடித்துவிடும். இதனால் அக்டோபர் மாதம் முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் என்ன நடைமுறை வருகிறது. இதனால் தமிழக மக்கள் ஒரு குடும்ப அட்டையை வைத்து எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதனால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் மக்களின் நேரம் சுமை குறையும் வீண் அலைச்சல்களும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இந்த நடைமுறை அடுத்த மாதத்தில் வரும் பட்சத்தில் தமிழக மக்கள் இதனால் பெரிதும் பயனடைவார்கள்.
அதே நேரத்தில் பயோமெட்ரிக் நடைமுறை "BIOMETRIC SYSTEM" தமிழகத்தில் விரைவில் அனைத்து ரேஷன் கடைகளில் வரவிருக்கிறது. இதனால் ரேஷன் கடைகளில் உள்ள மோசடி மற்றும் முறைகேடுகளை தடுக்க முடியும். இதனால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.