சொடக்குத் தக்காளியின் மருத்துவ பயன்களை இங்கு பார்ப்போம் :-
நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற தக்காளி போல் இந்த சொடக்கு தக்காளி கிடையாது. இந்த சொடக்கு தக்காளி பல மருத்துவ குணங்கள் கொண்டது. இவை சோலோனேசியா தாவர பெயர் கொண்டது. இந்தப் பழத்தை பறித்து தலையில் உடைத்தால் சொடக்கு என்று சத்தம் கேட்கும் அதனால் இதற்கு சொடக்கு தக்காளி என்று பெயர் வந்தது.
இந்த சொடக்கு தக்காளி அற்புதமான இனிப்பு சுவை கொண்டது. இந்தப் பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி1, விட்டமின் பி2, விட்டமின் ஏ, தயாமின் நியாஸின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் புரோட்டின், இரும்புச்சத்து, கால்சியம் பொட்டாசியம், கார்போ குளோரைட் மெக்னீசியம், சாம்பல் சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்தப் பழம் இரும்புச்சத்து குறைவினால் வரக்கூடிய அமீனியா ரத்தசோகை உடல் சோர்வு போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் தருகிறது.
கீழ் வாத நோய் அறிவுத்திறன் குறைபாடு ஞாபக சக்தி குறைவு போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் தருகிறது.
அறிவாற்றல் கூடவும், நினைவாற்றல் அதிகரிக்கும், இதயத்தில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் இந்த சொடக்கு தக்காளி பழம் பெரிதும் உதவுகிறது.
மலச்சிக்கல் செரிமானத் தன்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு நிவாரணம் தருகிறது. ஆகையால் இந்த சொடக்கு தக்காளி பழத்தை நம் வீட்டின் முன் வளர்த்து நமக்குத் தேவையான போது இந்தப் பழத்தை உட்கொண்டு பயனடைவோம்.