Header Ads Widget

<

தமிழக அரசின் அதிரடி அபராதம்! மக்களே உஷார்!!!



தமிழக அரசு பல்வேறு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஈடுபட்டு வந்தபோதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ்; 

1.தனிமைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

2.மேலும் வாயையும், மூக்கையும் சேர்த்து மூடி முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500 அபராதமும், பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

*சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள், பொது இடங்களில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5000 அபராதமும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத வாகனம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5000 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.