அக்டோபர் 1 2020 முதல் நாடு முழுவதும் புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன.
1. செல்போன், தொலைபேசி, இணைய வழி, ஆப் மூலம் அணுகினால் பொதுத் துறை வங்கிகள் வீடு தேடி வந்து சேவை செய்யும் நடைமுறை வரவிருக்கிறது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மிகவும் பயனடைவார்கள்.
2. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய கைரேகையை வைத்தப் பிறகு தான் பொருள்களை பெற முடியும். வேற யாரும் பொருட்களை பெற முடியாது.
3. பத்திரப்பதிவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அன்றே சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்கள் திருப்பிக் கொடுக்கப்படும்.
4. வாகன சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் போன்ற வாகனம் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் காலாவதியாகிவிட்டாலும் வருகிற டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.